Rock Fort Times
Online News

திருச்சி மத்திய சிறையில்  மயங்கி விழுந்த தண்டனை கைதி  பலி..

அரியலூர் மாவட்டம் கண்டிரதீர்த்தம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் சந்துரு (வயது 33). இவர் திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு வழக்கில் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் கடந்த 2021-ஆம் ஆண்டு அடைக்கப்பட்டார். இந்நிலையில்   மத்திய சிறையில் இருந்த சந்துரு திடீரென மயங்கி விழுந்தார் .உடனே அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனர். இதுகுறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி சண்முகசுந்தரம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்