திருச்சி,ஸ்ரீரங்கம் பஞ்சகரை சாலையில் மாநகராட்சி குடியேற்று நிலையத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்றது. அந்த பணியின் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் பணியில் ஈடுபட்டிருந்த கட்டிட தொழிலாளியான திருவானைக்காவல் நடு கொண்டையம்பேட்டை பகுதியை சேர்ந்த கணபதி(19) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பணியாற்றிய முருகானந்தம் என்பவருக்கும் மின்சாரம் பாய்ந்து அவர் படுகாயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.