Rock Fort Times
Online News

கருத்துரிமை, பேச்சுரிமையை சிதைக்கும் வகையில் கைது நடவடிக்கை எடுக்கும் திமுக அரசுக்கு கண்டனம்…* த.வெ.க சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!

கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று(5-11-2025) நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய், நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* கரூரில் உயிரிழந்தோருக்கு இப்பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

*தமிழகத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை.அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி பொதுக்குழு வலியுறுத்துகிறது.

* தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 35 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களின் விடுதலைக்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* வாக்குரிமையை பறிக்கும் S.I.R-க்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வது.

* டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாதிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வது.
* சதுப்புநிலத்தில் கட்டுமான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

* தலைவரின் மக்கள் சந்திப்புக்கு வரும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை இந்த அரசு வழங்க வேண்டும்.

* கழகத்தின் மீதும், கழகத் தோழர்களின் மீதும் காழ்ப்புணர்ச்சியுடன் அவதூறு பரப்பும் அரசின் கைக்கூலிகளுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வது.

* தமிழக தொழில்துறைக்கு வந்த முதலீடுகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

* ஜனநாயகத்துக்கு எதிராக கருத்துரிமையையும், பேச்சுரிமையையும் சிதைக்கும் வகையில் கைது நடவடிக்கை எடுக்கும் திமுக அரசுக்கு கண்டனம்
தெரிவித்துக் கொள்வது.

* கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. மக்கள் விரும்பும் விஜயின் தலைமையிலேயே போட்டியிடுவது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்