கோவையை சேர்ந்த ஷர்மிளா வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி எம்.பி., இன்று ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணம் மேற்கொண்டார். அவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பேருந்தில் பயணம் செய்தார். இதுவும் சமூக வலைதளங்களில் வைரலாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த ஷர்மிளாவை, அந்த பேருந்தின் உரிமையாளர் திடீரென பணி நீக்கம் செய்துள்ளார். முன்னதாக அவர் விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தி.மு.க. எம்.பி. கனிமொழி பேருந்தில் பயணம் செய்த நிலையில், திடீரென ஷர்மிளா பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஷர்மிளா இயக்கிய , பேருந்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.