திருச்சி, கம்பரம்பேட்டை பகுதியில் உள்ள ஜெயராம் நகர், காவேரி நகர் பகுதியில் நீண்ட காலமாக நிலவி வரும் குடிநீர் பிரச்சனை, சாலை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டி அப்பகுதி பொது மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆயினும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், உடனடியாக பிரச்சனைக்கு தீர்வு காண கோரியும் இன்று(2-12-2024) அப்பகுதி பொதுமக்கள் திடீரென நூற்றுக்கு மேற்பட்டோர் திருச்சி – கரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த வழியாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

Comments are closed.