பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் இன்று ( 29.06.2023 ) திரையரங்குகளில் வெளியானது. ஏ. ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இந்தப் படத்தில் வடிவேலு ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
மேலும் கீர்த்தி சுரேஷ், பகத்பாசில், லால் போன்றோர் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் நன்றாக இருப்பதாக கூறியதோடு படத்தின் டைரக்டர் மாரி செல்வராஜை கட்டித்தழுவி பாராட்டியுள்ளார். அதற்கான புகைப்படத்தை மாரி செல்வராஜ் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மாமன்னனை பார்த்து கட்டித்தழுவி கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பெரும் மரியாதை கலந்த நன்றியையும், பிரியத்தையும் சமர்பிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் இந்தப் படம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், மானுடர் அனைவரும் சமம் என்பது என் வாழ்க்கை முறை. என் கருத்திற்கு வலிமை சேர்க்கும் மாமன்னனுக்கு வாழ்த்துகள் என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.