தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க ஆகஸ்ட் 22-ல் அமெரிக்கா செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு தொழில் முதலீடுகள் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதனை மேலும் அதிகரிக்கும் வகையில், ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி முதலமைச்சர் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு மத்திய அரசு தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் அமெரிக்கா சென்று, கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியையும் சுந்தர் பிச்சை உள்ளிட்ட முக்கிய தொழில் அதிபர்களையும், முன்னனி தொழில் நிறுவன தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு, துபாய், ஜப்பான், ஸ்பெயின் என வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகள் ஈர்ப்படது என பல கட்ட நடவடிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலின்மேற்கொண்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு தொழில் முதலீடுகள் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதனை மேலும் அதிகரிக்கும் வகையில், ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி முதலமைச்சர் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு மத்திய அரசு தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் அமெரிக்கா சென்று கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியையும் சுந்தர் பிச்சை உள்ளிட்ட முக்கிய தொழில் அதிபர்களையும், சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமெரிக்காவில் உள்ள தொழில் நிறுவனங்களில் நேரடியாக சென்று பார்வையிட்டு தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது. வேலை வாய்ப்புகளை அதிகரித்து தொழில் துறையை மேலும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டே அமெரிக்கா பயணம் மேற்கொள்வதாக தொழில் துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சரின் அமெரிக்கா பயணத்துக்கு பிறகு அமெரிக்காவின் பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed.