போக்குவரத்தில் மாற்றம்
திருச்சி சிறுகனூரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட் டத்தில் பங்கேற்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சிக்கு வருகை தருகிறார். இதையொட்டி திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கனரக வாகனங்கள்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) திருச்சியில் தனது சூறாவளி பிரசாரத்தை தொடங்குகிறார். இதற்காக இன்று மாலை அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச் சிக்கு வருகிறார். பின்னர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர். அதன்படி இன்று காலை 10 மணி முதல் சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர் பைபாஸ் ரோடு, துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை, வையம்பட்டி வழியாக செல்ல வேண்டும். சென்னையில் இருந்து மதுரை நோக்கி செல்லும், அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர் பைபாஸ் ரோடு, குன்னம், அரியலூர், கீழப்பழுவூர், புள்ளம்பாடி, கொள்ளிடம் “ஒய்” ரோடு, திருச்சி பால்பண்ணை, திருவெறும்பூர், துவாக்குடி ரிங்க் ரோடு, கும்பங்குடி சந்திப்பு, பஞ்சப்பூர் வழியாக சென்று வரவேண்டும். இதேபோல் மதுரையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் விராலிமலை, மணப்பாறை, குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும். சென்னையில் இருந்து கரூர் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும், பெரம்பலூர் பைபாஸ் ரோடு, துறையூர், முசிறி, குளித்தலை, வழியாக கரூர் சென்று வர வேண்டும்.
தஞ்சை செல்லும் வாகனங்கள்
கரூரில் இருந்து தஞ்சை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலூர், அரியலூர், கீழப்பழுவூர், திருமானூர், திருவையாறு வழியாக தஞ்சை சென்று வரவேண்டும். சேலத்தில் இருந்து தஞ்சை நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் மைக்கேல் நாயக்கன்பட்டி, தொட்டியம், முசிறி, துறையூர், பெரம்பலூர், அரியலூர், கீழப்பழுர், திருமானூர், திருவையாறு வழியாக தஞ்சை சென்று வரவேண்டும்.
சென்னையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி செல்லும், அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர் பைபாஸ் ரோடு, குன்னம், அரியலூர், கீழப்பழுவூர், புள்ளம்பாடி, கொள்ளிடம் “ஒய்” ரோடு, திருச்சி பால்பண்ணை, திருவெறும்பூர், துவாக்குடி ரிங்க் ரோடு, கும்பங்குடி சந்திப்பு, கீரனூர் வழியாக சென்று வரவேண்டும்.
தஞ்சையில் இருந்து மதுரை நோக்கி செல்லும் அனைத்து கன ரக வாகனங்களும் துவாக்குடி டோல்பிளாசா, துவாக்குடி ரிங் ரோடு, பஞ்சப்பூர், மதுரை ரோடு, விராலிமலை, வளநாடு கைக் காட்டி, துவரங்குறிச்சி வழியாக சென்று வரவேண்டும். தஞ்சையில் இருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் துவாக்குடி டோல்பிளாசா, துவாக்குடி ரிங் ரோடு, பஞ்சப்பூர், மதுரை ரோடு, விராலிமலை, மணப்பாறை ரோடு, மணப்பாறை அரசு மருத்துவமணை, வையம் பட்டி வழியாக சென்று வரவேண்டும். இதேபோல் இன்று மதியம் 2 மணி முதல் சென்னையில் இருந்து மதுரை மற்றும் திண்டுக்கல் நோக்கி செல்லும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங் களும், பாடாலூர், தச்சங்குறிச்சி, பூவாளூர், கொள்ளிடம் “ஒய்” ரோடு, திருச்சி வழியாக செல்ல வேண்டும்.
மதுரை மற்றும் திண்டுக்கல்லில் இருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களும், கொள்ளிடம் “ஒய்” ரோட்டில் திருப்பிவிடப்பட்டு, நொச்சியம், மண்ணச்சநல்லூர், துறையூர், பெரம்பலூர் வழி யாக செல்ல வேண்டும். சென்னையில் இருந்து கரூர் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் துறையூர், முசிறி, குளித் தலை வழியாக செல்ல வேண்டும். கரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் அனைத்து வாகனங்களும் குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலூர், அரியலூர், கீழப்பழுவூர், திருமானூர், திரு வையாறு வழியாக தஞ்சை செல்ல வேண்டும்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.