சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழாவில், செங்கல்பட்டு மாவட்டம் கொடூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள 3 தொழிற்பேட்டைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ,அன்பரசன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி. அருண்ராய், குறு சிறு தொழில் நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் கே. மாரியப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதேபோல தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் 22 அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் டாட்டா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள 4.0 தொழில்நுட்ப மையங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். திருச்சி மாவட்டம் மணிகண்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 4.0 தொழில்நுட்ப மையம் மற்றும் மணப்பாறை
கண்ணுடையான்ப்பட்டியில் ரூ.85 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட சிப்காட் தொழிற்ப்பூங்காவையும் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தொழிற்பயிற்சி மையத்தில் குத்து விளக்கேற்றினார். நிகழ்ச்சியில், அரசு தொழில் பயிற்சி நிலையத்தின் முதல்வர் இளங்கோ, நிலைய மேலாண்மை குழு தலைவர் சுகுமார் மற்றும் தொழிற்பயிற்சி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.