Rock Fort Times
Online News

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில் அடைப்பு …!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அவர்  மீது திருச்சி மாவட்டம் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் புகார் அளித்திருந்தார் .  அந்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்காக கோவையில் இருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் மீது பாதுகாப்பிற்கு வந்த ஆய்வாளர்,
உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர்கள் தன் கையை முறுக்கி தாக்கியதாக சவுக்கு சங்கர் நீதிபதியிடம் புகார் அளித்தார்.

அவரது தரப்பு வழக்கறிஞர்களும் இதே குற்றச்சாட்டை முன் வைத்தனர்.  இதனை மறுத்த காவல்துறையினர் தங்கள் விரல் கூட சவுக்கு சங்கர் மீது படவில்லை என கூறினர். இந்த நிலையில் சவுக்கு சங்கரை ஒரு நாள் நீதிமன்ற காலில் வைக்க நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டார்.  அப்போது சைபர் கிரைம் போலீசார் சங்கரை 7 நாள் கஸ்டடி கோரி நீதிபதியிடம் மனு அளித்தனர்.  இந்த மனு மீதான விசாரணை நாளை(16-05-2024) மதியம் 12.30 மணி அளவில் நடைபெறும் என நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து சவுக்கு சங்கர் பலத்த பாதுகாப்புடன் திருச்சி லால்குடி கிளைச் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்