திருச்சி, உறையூரில் இயங்கிவரும் சக்ரா ஆயில்ஸின் ரீ-பேக்கிங் யூனிட்டானது, அரியமங்கலத்தில் இன்று(07-07-2024) திறக்கப்பட்டது. இதில், வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் வி.ஹரிஹரூண் பிள்ளை, மிட்டவுண் ரோட்டரி சங்க தலைவர் ராமதாஸ் , ஆடிட்டர் ஸ்ரீனிவாசன், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, ஜஸ்டின் ராஜ்குமார், ரமேஷ், சி.எஸ்.கே.கேக்ஸ் முத்துக்குமார்,
ஜீவன் டயக்னாஸ்டிக்ஸ் நிர்வாக இயக்குனர் விக்டர், விசாலம் சிட்பண்ட்ஸ் வெங்கடேஷ் உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள், லக்கி ஆயில்மில் உரிமையாளர் அப்துல் லத்தீஸ் உள்ளிட்ட தொழிலதிபர்கள், அரசு துறை அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், நண்பர்கள் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்திருந்தவர்களை சக்ரா ஆயில்ஸ் நிர்வாக இயக்குனர் எஸ்.கஜேந்திரன் வரவேற்றார்.
திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய், உள்ளிட்ட எண்ணெய்களை தயாரித்து விநியோகித்து வரும் நாங்கள் இங்கு ரீ-பேக்கிங் யூனிட் ஆரம்பித்திருப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் சப்ளை செய்ய முடியும் என சக்ரா ஆயில்ஸ் கஜேந்திரன் தெரிவித்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை சக்ரா ஆயில்ஸின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Comments are closed.