Rock Fort Times
Online News

பிரதமர் அலுவலக செயலாளர் என்று கூறி பெண் இன்ஸ்பெக்டருடன் இணைந்து மோசடி செய்த நபரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை…!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரும், சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் காவேரியம்மாள் என்பவரும், திருமணம் கடந்த உறவில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. திருச்சி, காட்டூரில் தனியாக வீடு எடுத்து இருவரும் வசித்து வருகின்றனர். இளங்கோவன், தான் பிரதமர் அலுவலகத்தில் செயலாளராக பணியாற்றுவதாகவும், மத்திய பல்கலைகழகங்கள், மத்திய அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் பணி வாங்கித் தருவதாகவும், பணியிட மாறுதல் வாங்கித் தருவதாகவும் மோசடியில் ஈடுபட்டு வருவதாக சி.பி.ஐ.,க்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில் இளங்கோவன் மீது வழக்கு பதிவு செய்துள்ள சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று அதிகாலை, கந்தர்வகோட்டை மற்றும் காட்டூரில் உள்ள இளங்கோவன் வீடுகளில் சோதனை நடத்தினர். 10 அதிகாரிகள் கொண்ட குழுவினர் நடத்திய இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட தாக கூறப்படுகிறது. பின்னர், இளங்கோவன் மற்றும் அவரது தோழி இன்ஸ்பெக்டர் காவேரியம்மாள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்