Rock Fort Times
Online News

போலி சான்றிதழ் கொடுத்து 24 ஆண்டுகள் அரசு பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை மீது வழக்கு…

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே போலி கல்வி சான்றிதழ் கொடுத்து , பணியில் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கண்டமனூர் பகுதி ராஜேந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் விஜயபானு என்பவர் கடந்த 1999ம் ஆண்டு ஆசிரியராக பணியில் சோ்ந்துள்ளார். அவர் 24 ஆண்டுகள் ஆசிரியையாக பணியாற்றிய நிலையில் அவரது சான்றிதழ்கள் போலியானது என தொடக்க கல்வி அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அவரது சான்றிதழை சரி பார்த்த போது அது போலியானது என்பது தெரியவந்தது. இது தொடர்பாக தொடக்க கல்வி அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஆசிரியை விஜயபானுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 12ம் வகுப்பு சான்றிதழை போலியாக வழங்கி 24 ஆண்டுகள் , ஆசிரியையாக அவர் பணியாற்றிய சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்