Rock Fort Times
Online News

கோவையில் பிரபல பேருந்து ஓட்டுனர் சர்மிளா மீது வழக்கு…

கோவையைச் சேர்ந்தவர் சர்மிளா. தனியார் பேருந்து ஒன்றில் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். பெண் ஒருவர் பேருந்தை ஓட்டியது நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அவர் ஓட்டிச் சென்ற பேருந்தில் கனிமொழி எம்பி, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் பலர் பயணம் செய்து அவரை பாராட்டினர். இந்நிலையில் பிற பேருந்து ஓட்டுநர்களுக்கும், அவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக அவர், தனியார் பேருந்து ஓட்டுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாகவும், ஆனால் தான் அவரை நீக்கவில்லை, அவராகவே விலகிக் கொண்டார் என்றும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்போது சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனால் சர்மிளா பிரபலமானார். அவரை நடிகர் கமலஹாசன் அழைத்து அவருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்தார். தற்போது அவர் கார் ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் கோவையில் கடந்த இரண்டாம் தேதி சத்திரோடு சங்கனூர் சந்திப்பில் காட்டூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி பணியில் இருந்த போது அவ்வழியாக காரில் வந்த சர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், அதனை கேட்டபோது வீடியோ எடுத்து சர்மிளா அவரது “Instagram” பக்கத்தில் தவறான தகவல்களை கொண்டு பதிவிட்டதாக ராஜேஸ்வரி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், சர்மிளா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிதாக கட்சி தொடங்கியவர் திமுக அழிய வேண்டும் என நினைக்கிறார்- விஜயை சாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 of 900

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்