திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே லாரி மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த மோகன் குமார் என்பவர் தனது குடும்பத்தினருடன் வாடகை காரில் சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை புதுக்கோட்டையை சேர்ந்த அப்துல் கலாம் (25) ஓட்டினார். அந்த கார் இன்று(01-10-2026) திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே சென்று கொண்டிருந்த போது திருச்சியில் இருந்து நத்தம் நோக்கி இரும்பு பாரம் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் பயங்கர வேகத்தில் மோதியது.
இதில் காரில் பயணம் செய்த அனைவரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த இருவரது உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.