புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இன்று ( 30.06.2023 ) அதிகாலை திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் கிராமத்தில் இருந்து சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வழிபட காரில் அதே ஊரைச் சேர்ந்த தருண்ராஜ் ( 19) பரிமளா ( 42) பழனிவேல் ( 44 ) விக்கி ( 28) ஓட்டுநர் ஆகிய 4 பேரும் வந்துகொண்டிருந்தனர். இந்த கார் வண்டுராயன்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக எதிரே நின்று கொண்டிருந்த கார் மீது அதிவேகமாக மோதியதில் 2 கார்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. இதில் பயணம் செய்த பரிமளா மற்றும் தருண்ராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினா். பின்னர் இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் மற்றும் கடலுாா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாலையில் கார்கள் மோதிக் கொண்டு பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.