Rock Fort Times
Online News

இ.சேவை மையத்தின் பூட்டை உடைத்து கேமரா, கணினி உதிரி பாகங்கள்  திருட்டு..

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் களர்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்ட பிரபு (வயது 28). இவர் மணப்பாறை வையம்பட்டி அருகே கல்பட்டி பகுதியில் போட்டோ ஸ்டுடியோ மற்றும் இ.சேவை மையம் நடத்தி வருகிறார். நேற்று மதியம் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு   மதிய உணவு  சாப்பிட்டு வந்து பாா்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது விலை உயர்ந்த ஒரு கேமரா, மற்றும் இ. சேவை மையத்தில் கணினி உதிரி பாகமான டிவைஸ் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து மணிகண்ட பிரபு வையம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்