தமிழ்நாடு கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சின்னசாமி திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் 2,500 கல் குவாரிகளும், 3000 கிரஷர்களும் செயல்பட்டு வருகின்றன. மேஜர் மினரலுக்கு உண்டான சட்ட திட்டங்களை மைனர் மினரல் என்றழைக்கப்படும் கல், ஜல்லி உடைக்கும் சிறு தொழில்களுக்கு அமல்படுத்திய காரணத்தால் தாங்கள் கடும் இழப்பை சந்தித்து தொழிலை தொடர முடியாத நிலை உருவாகியுள்ளது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இது போன்ற பிரச்சினைகள் வந்ததில்லை.
தற்போது புதிதாக பல்வேறு விதமான சட்ட திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது.
குவாரிகளுக்கு கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது. இதனால், சிறிய கல்குவாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குவாரிகளில் விபத்து ஏற்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எனவே எங்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் , ஈடுபட்டு உள்ளோம். இந்த போராட்டத்தால் 2,500 கல் குவாரிகளும், 3,000 கிரஷர்களும் இயங்காது. அதே போல இங்கு இயங்கும் லாரிகளும் ஓடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.