Rock Fort Times
Online News

காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு- களம் காண்கிறது பாஜக…!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிசம்பர் 14 -ம் தேதி காலமானார். இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5 -ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று(07-01-2025) அறிவித்தார்.
பிப். 8 ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை காங்கிரஸ் விரைவில் அறிவிக்கவுள்ளது. இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நாளை இதுதொடர்பாக முக்கியக் கூட்டம் நடைபெற உள்ளது. இடைத்தேர்தல் கூட்டணி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்