Rock Fort Times
Online News

அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ் டிரைவர் பலி ..

புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் பாலகுமார் (வயது 49 ).இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.சி நகரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை ஓய்வறையில் வேலையை முடித்துவிட்டு தூங்கச் சென்ற அவா் , அங்கு மயங்கி விழுந்த நிலையில் கிடந்துள்ளாா். உடனே அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி அன்னபூரணி கொடுத்த புகாரின் அடிப்படையில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்