Rock Fort Times
Online News

ஆந்திராவில் டிப்பர் லாரி மீது பேருந்து மோதல்: தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பலி…!

தமிழகத்தை சேர்ந்த 40 பேர் ஒரு பேருந்தில் திருப்பதிக்கு சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தனர். சித்தூர் மாவட்டம், கங்கசாகரம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்ட டிப்பர் லாரி மீது அந்த பேருந்து பயங்கர வேகத்தில் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 26 பேர் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்த அந்த மாநில போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த 26 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பேருந்தை அதன் டிரைவர் அதி வேகமாக இயக்கியது தான் விபத்திற்கு காரணம் என தெரியவந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உயிரிழந்த 4 பேரில், குமரியை சேர்ந்த ஜீவன் என்பவர் உடல் அடையாளம் காணப்பட்டது. மீதமுள்ளவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்