திருச்செந்தூர் முருகன் கோவிலில் விரைவு தரிசனத்துக்கு லஞ்சம்: பக்தரோடு பக்தராக நின்று அமைச்சர் ரமேஷ் எடுத்த அதிரடி ஆக்க்ஷன்…!
திருச்செந்தூர் முருகன் கோவிலில் விரைவு தரிசனத்திற்காக முறைகேடாக பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பணம் வசூலிக்கப்படுவதை கண்டுபிடிக்க பக்தர்களோடு பக்தராக கோவிலுக்கு வந்தார். அப்போது அவரிடம் குறுக்கு வழியில் தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல சில அர்ச்சகர்கள் ரூ.1500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அமைச்சர் நேரடியாக ஜி-பே மூலம் ரூ.1, 500 செலுத்தியுள்ளார். பின்னர் அவர் அமைச்சர் என்று தெரிந்ததும் அர்ச்சகர்கள் அதிர்ந்து போயினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டதுடன், தங்களது தவறுகளை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கடிதம் எழுதித் தருமாறு அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், கோவிலில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், கோவில்களில் பக்தர்களிடம் முறைகேடாக பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அமைச்சரின் இந்த திடீர் ஆய்வு மற்றும் அதிரடி நடவடிக்கை திருச்செந்தூர் கோவில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.