தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ள அவர், மூன்றாவது வாரமாக இன்று( செப்.27) நாமக்கல், கரூர் மாவட்டங்களில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவர், கார் மூலம் சாலை மார்க்கமாக நாமக்கல் நோக்கி புறப்பட்டார். அப்போது விஜய்யுடன் சென்ற பவுன்சர்கள் கார் விபத்தில் சிக்கியது. முசிறி திருஈங்கோய்மலை என்ற இடத்தில் முன்னால் சென்ற காரின் மீது பவுன்சர்கள் சென்ற கார் மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் தொண்டர்களிடையே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் அந்த கார்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.

Comments are closed.