பாஜக வை சேர்ந்த சிலர் சமூக வலைதளங்களில் பிற மதத்தினரை புண்படுத்தும் வகையில் அவதூறு பரப்பி வருவதாகவும், திமுக அரசு கொண்டுவரும் திட்டங்கள் குறித்தும், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருவதாக போலீஸா ருக்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன. அந்த புகார்களின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் அவதூறு பரப்புபவர்கள் யார் என்பது குறித்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக ஊடகப் பிரிவு செயலாளரான சவுதாமணி என்பவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி அவதூறு பரப்பி வருவது தெரிய வந்தது. அதன்பேரில், அவரை திருச்சி சைபர் கிரைம் போலீசார் சென்னையில் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே அவதூறு பரப்பிய வழக்கு சென்னையில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.