ஆட்டோ, வாடகை கார்களை போல தமிழ்நாட்டில் ஆங்காங்கே பைக் டாக்ஸிகளும் இயக்கப்பட்டு வருகின்றன. பகுதி நேரமாக வேலை தேடுவோர், பணம் தேவைப்படுபவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை தனியார் நிறுவனத்துடன் இணைத்து அதை டாக்ஸியாக இயக்கி வருகின்றனர். ஆட்டோ , வாடகை கார்களை விட, பைக் டாக்சி கட்டணம் குறைவு என்பதால் பயணிகள் பலர் பைக் டாக்ஸியை அணுக தொடங்கியுள்ளனர். இந்நிலையில், தமிழக அரசு பைக் டாக்ஸிக்கு தற்போது வரை அனுமதி அளிக்கவில்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” சில விஷயங்களில் மத்திய அரசு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. பைக் என்பது தனி நபர் பயன்படுத்தும் வாகனம். வாடகைக்கு விடப்படும் வாகனமாக அங்கீகரிக்கப்படவில்லை. பைக் டாக்ஸிகளை பயன்படுத்த கூடாது என்பது தமிழக அரசின் நிலை. காவல்துறை இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.