மணப்பாறையில் ஜனவரி மாதம் நடைபெறும் பாரத சாரணியர் இயக்கத்தின் பெருந்திரள் மாநாடு ! முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் !
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வருகிற ஜனவரி மாதம் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிறைவு விழா ஆகியவை நடைபெற உள்ளது. இதன் தலைவராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்ள நிலையில், துணை தலைவர்களாக அமைச்சர் கே.என்.நேரு தங்கம் தென்னரசு ஆகியோர் பொறுப்பு வகித்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.இந்தியா முழுவதிலுமிருந்து சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் இவ்விழா மணப்பாறை சிப்காட் பகுதியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பெருந்திரள் பேரணி நடைபெறும் இடத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் பாரத சாரணியர் இயக்கத்தின் தலைவருமான அன்பில் மகேஷ் பொய் மொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார். இதில் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி, மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது, மாவட்ட ஆட்சியர் எம்.பிரதீப் குமார்,அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.