இந்திய ரெயில் உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் பாரத் கவுரவ் சுற்றுலா சிறப்பு ரெயிலை இயக்கவுள்ளது. அதன்படி அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி கொச்சுவேலியில் இருந்து 11 நாட்கள் பயணமாக வைஷ்ணவ தேவி யாத்திரை என்ற பெயரில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கேரளா மாநிலம் கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில், நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூர் வழியாக சென்று ஐதராபாத், ஆக்ரா, மதுரா, வைஷ்ணவதேவி (கட்ரா), அமிர்தசரசை சென்றடையும். இதற்கான பயண கட்டணம் தலா ஒருவருக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டியில் ரூ.22,350, 3ம் ஏ.சி வகுப்பில் பயணம் செய்ய ரூ.40,380 ஆகும். இந்த ரெயிலில் 3 குளிர்சாதன பெட்டிகள், 8 படுக்கை வசதி பெட்டிகள், 1 பேட்டரி கார், 2 பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் இருக்கும். ஏ.சி. மற்றும் ஏ.சி. அல்லாத தங்குமிடம், உள்ளூர் பகுதிகளை பார்வையிடுவதற்கான போக்குவரத்து, உணவு, பயண காப்பீடு, சுற்றுலா மேலாளர் மற்றும் தனியார் பாதுகாவலர் வசதி இடம் பெற்றுள்ளது. இந்த பயணத்திற்கான டிக்கட்டுகளை முன்பதிவு செய்ய 8287931974 என்ற தொலைபேசி எண்ணிலும், www.irctctourism.com என்ற இணைய தளத்திலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.