திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி சந்தனபுரத்தைச் சேர்ந்தவர் ராவணன் (58). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், சம்பவத்தன்று அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரது பக்கத்து வீட்டுக்காரர்களான ரொனால்ட் மற்றும் சார்லி ஆகியோர் அவரை ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது. அப்போது ராவணன் அதனை கண்டு கொள்ளாமல் அங்கிருந்து கடந்து சென்றார். இந்த நிலையில், மற்றொரு நாள் சந்தனபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ரொனால்ட் மற்றும் சார்லி ஆகியோர் ராவணனை தகாத வார்த்தைகளால் திட்டி இரும்பு குழாயால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராவணன் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் ரொனால்ட், சார்லி ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.