Rock Fort Times
Online News

திருச்சியில் பக்ரீத் கொண்டாட்டம்: ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை..!

இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை இன்று (28-05-2026) காலை முதல் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பக்ரீத் பண்டிகையையொட்டி, திருச்சி பீமநகர் ஜூம்மா திடலில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், அதன் மாநில தலைவர் ரபீக் தலைமையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இந்த கூட்டுத் தொழுகையில் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று துவா செய்தனர். இதுபோல், சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பிலும், தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு குர்பானி மூலம் ஆடு, மாடுகள் பலியிட்டு இறைச்சி வழங்கப்பட்டது. இதேபோல், திருச்சி மணப்பாறை பாத்திமா மலையில் உள்ள ஈத்கா திடலிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் புத்தாடை அணிந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஒருவரை ஒருவர் கட்டியணைத்து அன்பை பரிமாறிக் கொண்டு பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்