திருச்சி தீரன்நகர் வாஞ்சிநாதன் நகர் பகுதியை சேர்ந்த மணிமோகனின் மனைவி சித்ரா. இவர் திருச்சி போலீஸ் கமிஷனர் எம். சத்யபிரியா ஐஏஎஸ்சிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- ஆம்னி பஸ் உரிமையாளரான எனது கணவர் மணிமோகன் கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனை பயன்படுத்தி கணவரின் நண்பரான மணப்பாறையைச் சேர்ந்த கலைச்செல்வன், பிராட்டியூர் கணபதி நகரில் நிறுத்தி வைத்திருந்த எங்களுக்கு சொந்தமான 2 ஆம்னி பஸ்களை கடத்திச் சென்று கரூரில் விற்க முயன்றுள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தார். என்னை ஏமாற்றி எனது கணவர் மணிமோகனின் 2 ஆம்னி பஸ்களை கடத்திச் சென்ற கலைச்செல்வன் மீது நடவடிக்கை எடுத்து பஸ்களை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.