திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணிகள் இருவர் தங்கள் காலணி மற்றும் பேண்ட் சீக்ரெட் பாக்கெட்டில் 263 கிராம் எடை கொண்ட ரூ.22.97 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.