Rock Fort Times
Online News

திருச்சி காவிரி ஆற்றில் புதிய பாலம் அமைக்க பூமி பூஜை! அமைச்சர்கள் பங்கேற்பு!

திருச்சி மாநகரையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் ஏற்கனவே இருந்த சிறிய பாலத்துக்கு மாற்றாக, 1976 ஆம் ஆண்டில் புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. இதனிடையே, திருச்சி – ஸ்ரீரங்கம் இடையே வாகன போக்குவரத்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, தற்போது உள்ள பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்ட மாநில நெடுஞ்சாலைத் துறை மூலம் திட்டமிட்டு அதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு அரசுக்கு அனுப்பப்பட்டது. இப்பாலத்திற்கான நிர்வாக ஒப்புதல் அரசிடம் பெறப்பட்டு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு தற்போது பாலம அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. இந்த புதிய பாலம் தற்போதுள்ள பாலத்துக்கு மேற்கு புறத்தில், திருச்சி மேல சிந்தாமணியில் இருந்து மாம்பழச்சாலை வரை 545 மீட்டர் நீளத்துக்கு 1.5 மீட்டர் அகலம் உள்ள நடைபாதையுடன் சேர்ந்து 17. 75 மீட்டர் அகலத்தில் நான்கு வழித்தளங்களுடன் அமைகிறது. இதற்கான ரூபாய் 161 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பாலம் கட்டுமானத்துக்கு ரூபாய் 68 கோடியும், நில அளவை ஆர்ஜிதத்துக்கு ரூபாய் முப்பது கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இது தவிர அணுகு சாலைகள், ரவுண்டானா, கட்டுமானம், மின்வசதி, மின் கம்பங்கள், உள்ளிட்டவைகளுக்காக மீதிதொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பாலப்பணிகள் தொடங்கப்பட்டு 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

இப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர்கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று பூஜை நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் எம்.பிரதீப் குமார் மற்றும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் மற்றும் மேயர் மு.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்