திருச்சி விமான நிலையத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு… (பிரத்யேக வீடியோ இணைப்பு)
திருச்சியில் இன்று (2-1-2024) நடைபெறும் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரி அமித்ஷா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வருகை தந்துள்ளனர். அதேபோல முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் திருச்சி வந்துள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், எஸ்.எஸ்.சிவசங்கர், டிஆர்பி ராஜா, மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி , மாநகராட்சி மேயர் அன்பழகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, திருநாவுக்கரசர், சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், துரை சந்திரசேகர், நீலமேகம், திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளர் மதிவாணன் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.