சென்னை மாநகர நுண்ணறிவுப்பிரிவு துணை கமிஷனர் பதவி, இணை கமிஷ னர் பதவியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சென்னை மாநகர உளவுப்பிரிவு துணை கமிஷனராக பணியாற்றி வந்த அரவிந்த், திருச்சி மாநகர காவல் துறையில் தலைமையிட துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் பதவி ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் போலீஸ் கமிஷனர் காமினியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு முன்பு அவர் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, திருப்பூர் மாநகர துணை கமிஷனர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இவர் ஜனாதிபதி பதக்கம் உள்பட பல்வேறு பதக்கங்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.