நாம் தமிழர் கட்சி துணைப் பொதுச் செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர், கொள்கை பரப்புச் செயலாளராக பதவி வகித்து வருபவர் சாட்டை துரைமுருகன்.
சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இதன் வாயிலாக தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு சர்ச்சை கருத்துகளை கூறி வருகிறார். திருநெல்வேலி வீராணம் பகுதியில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த போது திருச்சி சைபர் க்ரைம் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் திமுக தலைவர் மறைந்த கருணாநிதி மற்றும் திமுக அரசை தரக்குறைவாக விமர்சித்ததாக, திராவிடர் கழகத்தை சேர்ந்தவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின்பேரில் அவரது தனிப்படையினர் சாட்டை துரைமுருகனை கைது செய்து தற்போது திருநெல்வேலியில் இருந்து திருச்சிக்கு அழைத்து வருகின்றனர்.

Comments are closed.