திருச்சி காட்டூர் சக்திநகர் 4-வது தெருவில் இயங்கிவரும் ஆரோக்கியமாதா ஆயுஷ் வெல்னெஸ் க்ளினிக்கின் புதிய கிளையானது, திருச்சி மேலப்புதூர் அருகேயுள்ள நல்லாயன் நிலைய வளாகத்தில் திறக்கப்பட்டது. திருச்சி மாவட்ட முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞரும், அதிமுக பிரமுகருமான ஆர்.எட்வின் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மருத்துவர்கள் நிரஞ்சனா, ஆரோக்கிய சியாமளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சி ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் யூஜின் அடிகளார், நல்லாயன் இல்லத்தின் இயக்குனர் அம்ப்ரூஸ் அடிகளார், செயலாளர் தாமஸ் ஜூலியன் அடிகளார், புனித ஜான்பால் பல்துறை நிலையத்தின் இயக்குனர் சார்லஸ் அடிகளார், சகாயமாதா ஆலய பங்குத்தந்தை பென்ஜமின் அடிகளார் ஆகியோர் குத்து விளக்கேற்றினர். இதுகுறித்து மருத்துவர் ஆரோக்கிய சியாமளா கூறுகையில்.,
இங்கு, உள்ளங்கால்கள் மற்றும் உள்ளங்கைகளில் உள்ள சில குறிப்பிட்ட நரம்புகளை தூண்டி செயல்பட வைப்பதன் மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு பக்கவிளைவுகள் இல்லாமல் தீர்வு காணலாம். குறிப்பாக சிறுநீரக கோளாறுகள், பக்கவாதம், தண்டு வடம் சார்ந்த பிரச்சனைகள், கர்ப்பப்பை கோளாறுகள், இதய நோய்கள், தோல் வியாதிகள், நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு, கேன்சர், குழந்தையின்மை, பார்வைத்திறன் குறைவு, ரத்த அழுத்தம், தைராய்டு, பேச்சாற்றல் குறைபாடு, சிறுநீரக கற்கள், சைனஸ், மூட்டுவலி, சர்க்கரை நோய், பாத எரிச்சல் போன்ற அனைத்து விதமான வியாதிகளுக்கும் பாத நரம்பியல் மற்றும் சித்த மருத்துவ முறையில் தீர்வு காணப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை தோறும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்படும் இம்மருத்துவ மையத்தில் நோய் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என்றார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.