தமிழகத்தில் விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்தும், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் திருச்சி அண்ணாசிலை அருகே அ.தி.மு.க.சார்பில் இன்று ( 21.06.2023 ) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. ப.குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். அப்போது தொண்டர்கள் சாலையை ஆக்ரமித்து நின்றதால்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி மற்றும் போக்குவரத்து போலீசார் தொண்டர்களை போக்குவரத்துக்கு வழி விட்டு சாலை ஓரமாக செல்லுமாறு கூறினர். இது தொடர்பாக தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனாலும் இறுதிவரை தொண்டர்கள் சாலையை விட்டு நகர மறுத்தனர். பின்னர் ஆர்ப்பாட்டம் முடிந்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.