நமது நாட்டில் போர் விமானங்களை உருவாக்குவதற்கான முக்கிய அமைப்பான ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சியில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்
பணி விபரங்கள் :
கணினி அறிவியல் மற்றும் இன்ஜினீயரிங், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் உள்ளிட்ட துறைகளில் ‘பி’ மற்றும் ‘சி’ துறைகளில் திட்ட ஆராய்ச்சியாளர் பணி.
மொத்த காலிபணியிடங்கள்: 105
சம்பளம்: ரூ.90,789 – 1,08,073 வரை
வயது வரம்பு: பி பிரிவிற்கு அதிகபட்சமாக 35; சி பிரிவிற்கு அதிகபட்சமாக 40. (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
கல்வி தகுதி: இன்ஜினீயரிங் அல்லது தொழில்நுட்பப் பிரிவுகளில் இளங்கலை பட்டம்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை :
முதல்நிலை ஆன்லைன் நேர்காணல், இறுதி தனிப்பட்ட நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
www.ada.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 21, 2025.
Comments are closed.