தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட 14 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு “டீன்”களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட பல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், முதல்வர்கள் நியமிக்கப்படாமல் அந்த பதவி காலியாக இருந்தது.
மருத்துவ கல்வி கட்டமைப்பில் முக்கியமான இந்த பணியிடங்களை நிரப்பாதது குறித்து அரசியல் கட்சிகள்கேள்வி எழுப்பி வந்தன. இந்நிலையில் 14 டீன்களை நியமித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான உத்தரவை சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாகு இன்று வெளியிட்டுள்ளார்.
அதில்,
மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரி யூராலஜி பேராசிரியர் சிவசங்கர் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும்
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மேற்பார்வையாளர் எம். பவானி, கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி முதல்வராகவும்
கோவை இ.எஸ்.ஐ.சி மருத்துவமனை மருத்துவ மேற்பார்வையாளர் டி. ரவிக்குமார் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் ,
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ராமலக்ஷ்மி கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும்,
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் குமாரவேல், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும்
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் எல்.அருள் சுந்தரேஸ் குமார் மதுரை அரசு மருத்துவக் கல்லூ ரி முதல்வராகவும்
நெல்லை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஆர். அமுதா ராணி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும்,
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டேவிட் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும்
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஜே.தேவி மீனல் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை முதல்வராகவும்,
மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரி பேராசிரியர் கலைவாணி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும்,
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் எஸ்.முத்து சித்ரா தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும்,
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வி. லோகநாயகி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் ,
கோவை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஜெயசிங் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும்,
கோவை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ரோகினி தேவி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Comments are closed.