வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களை இன்று மாலை அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னையில் உள்ள கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் வேட்பாளர்களை அறிவித்தார். அதில், மதுரையில் சு.வெங்கடேசனும், திண்டுக்கல்லில் சச்சிதானந்தமும் போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலக் குழு கூட்டத்தில் சு.வெங்கடேசன், சச்சிதானந்தம் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.