Rock Fort Times
Online News

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, அரங்கத்தில் நடைபெறாது  : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று ( 23.12.2023 )  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக்குப்பிறகு கலெக்டர் சங்கீதா கூறியதாவது:

“அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக கீழக்கரை கிராமத்தில் 44 கோடி ரூபாய் செலவில் 66 ஏக்கரில் மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அடுத்த ஆண்டு வழக்கமான இடத்திலேயே நடைபெறும்.” என தெரிவித்துள்ளார். 2024-ம் ஆண்டு அலங்காநல்லூர் அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கமான இடத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்