Rock Fort Times
Online News

மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு நாளை தொடக்கம்…

தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அடுத்த மாதம் 7-ந்தேதி நடைபெற இருந்த பொது கலந்தாய்வு தள்ளிப்போகும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். இந்தநிலையில எம்.பி.பி.எஸ். , பி.டி.எஸ். மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு நாளை ( 28.06.2023 ) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவு வெளியாகி தமிழகத்தில் 78 ஆயிரம் பேர் மருத்துவ படிப்பில் சேர தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு ஜூலை 2-வது வாரத்தில் கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் எடுத்து படித்தவர்கள், நீட் தேர்வு எழுதி எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியும்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்