நடிகை குஷ்பு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து குஷ்பு பேசுகையில் தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை, பெண்களுக்கான சுயமரியாதையின்மை ஆகியவற்றை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். அந்த வகையில் தற்போது எனக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் யாரும் பயப்பட வேண்டாம். நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் போராடுவோம். குஷ்புவுக்கு தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.