நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று(04-06-2024) எண்ணப்பட்டன. கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியான யுடிஎப் கூட்டணி 17 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்.டி.எப்.கூட்டணி 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன. கேரளாவில் இதுவரை வெற்றியே பெறாத பாஜக முதல் முறையாக ஒரு இடத்தை கைப்பற்றியுள்ளது. திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ்கோபி வெற்றி பெற்றுள்ளார். இதேபோல இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறங்கிய நடிகை கங்கணா ரணாவத் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்த் சர்மா தோல்வி அடைந்தார். உத்தரபிரதேசத்தின் மதுரா தொகுதியில் பாஜக வேட்பாளர் நடிகை ஹேமமாலினி போட்டியிட்டார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் முகேஷ் தங்கரை காட்டிலும் கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
Comments are closed.