தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 122 வது பிறந்த நாள், ஒவ்வொரு வருடமும் ஜூலை 15ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, திருச்சியில் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என் நேரு தலைமையில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்நிகழ்வில் திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் கே.வைரமணி, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், சேர்மன் துரைராஜ் , டோல்கேட் சுப்பிரமணி, பகுதி செயலாளர்கள் மோகன் தாஸ் , கமல் முஸ்தபா, நாகராஜன், இளங்கோ தொமுச குணசேகர், கிராப்பட்டி செல்வம், கருமண்டபம் சுரேஷ் சர்ச்சில் ,பரமசிவம் கருத்து கதிரேசன், உட்பட பலர் கலந்து கொண்டனர்
Comments are closed.