கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கீழ பஞ்சப்பட்டி வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் சித்ரா (வயது 23).இவர் சோமரசம்பேட்டை மாரியம்மன் கோவில் தோப்பு பகுதியில் வசிக்கும் முருகானந்தம் என்கிற ஆனந்த் என்பவரை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மகளுடன் பேசுவதை நிறுத்திவிட்டனர். இதற்கிடையே முருகானந்தம் தினமும் மது அருந்தி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் மன அழுத்தத்துக்கு ஆளான சித்ரா வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தாயார் மகாலட்சுமி சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சித்ராவுக்கு திருமணம் ஆகி சில மாதங்களே ஆவதால் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்று உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.