திருச்சி, காந்தி மார்க்கெட் பகுதியில் மூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த பெண்ணை மடக்கிய பொதுமக்கள்…!
திருச்சி மாவட்டம், லால்குடி, சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியம்மாள் (வயது 70). இவர், காந்தி மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக் கொண்டு திருச்சி மரக்கடை பழைய பாஸ்போர்ட் அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த திருச்சி, குழுமணி ரோடு பகுதியை சேர்ந்த மாசிலாமணி மனைவி தங்கம்மாள் (55) என்பவர் கன்னியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் தங்கம்மாளை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கம்மாளிடம் இருந்த நகையை மீட்டதுடன் அவரை சிறையில் அடைத்தனர். அண்மையில், இதே காந்தி மார்க்கெட் பகுதியில் முதியவர் ஒருவரை இளைஞர்கள் சிலர் வழிமறித்து தாக்கி
அவர் பையில் இருந்த பணத்தை பறித்து சென்றனர். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து முதியவரை தாக்கி பணம் பறித்த கும்பலை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.