லால்குடி அருகே அரசு பேருந்தின் முன்புற சக்கரத்தில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கிக் கொண்ட வாலிபர் – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்…!
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தண்டாங்கோரை கிராமம் கீழ தெருவை சேர்ந்த ஜெஸ்டின் ராஜ் மகன் திலீப்ராஜ் (வயது 22). இவர் திருச்சியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இன்று(06-08-2024) வழக்கம்போல தனது மோட்டார் சைக்கிளில் தண்டாங்கோரையிலிருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். மேல வாளாடி அருகே அவர் சென்றபோது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்து விட்டது. இதுகுறித்த தகவலின்பேரில்,
அவரது நண்பரான மேல வாளாடி பகுதியை சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் (22) சம்பவ இடத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து , திலீப்ராஜ் மோட்டார் சைக்கிளை(டோவ் ) தள்ளி கொண்டு இருவரும் சென்று கொண்டிருந்தனர். திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அகிலாண்டபுரம் அருகே சென்றபோது நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்தின் முன்புற சக்கரத்தில் மோட்டார் சைக்கிளுடன் திலீப்ராஜ் சிக்கிக்கொண்டார். உடனே, அங்கேயே பஸ் நிறுத்தப்பட்டு திலீப்ராஜ் மீட்கப்பட்டார். அப்போது அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் அவர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பேருந்து ஓட்டுனர் மாரியப்பன் சாமர்த்தியமாக செயல்பட்டு பிரேக் பிடித்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.