Rock Fort Times
Online News

தஞ்சாவூர் அருகே பாலியல் வழக்கில் சிக்கிய குற்றவாளி போலீசாரிடமிருந்து தப்ப முயன்றதில் கால் முறிவு

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள பாப்பாநாடு பகுதியைச் சேர்ந்த 22 வயது பட்டதாரி பெண், கடந்த 12-ம் தேதி 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இதுகுறித்து அப் பெண் அளித்தபுகாரின் பேரில், தெற்கு கோட்டையைச் சேர்ந்த கவிதாசன்(25), அவரது நண்பர்கள் திவாகர் (27) பிரவீன்(20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.அவர்களிடம், ஒரத்தநாடு காவல் நிலையத்தில் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் திடீரென வழக்கின் முக்கிய நபரான கவிதாசன் போலீஸாரிடமிருந்து தப்ப முயன்றார்.
அப்போது அவர் கீழே விழுந்ததில், அவரது வலது கால் முறிந்தது. இதையடுத்து அவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

🔴LIVE : காவல்துறை மீது தாக்குதல் அதிகரித்துள்ளது திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

1 of 938

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்