Rock Fort Times
Online News

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் பலி…!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு தயாரிப்பு ஆலைகள் உள்ளன. அந்தவகையில் சாத்தூர் அருகே கே.மேட்டுப்பட்டியில் சரவணன் என்பவரது விவசாய தோட்டத்தில் செயல்பட்ட பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. அப்போது அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும், உயிரிழந்த 2 தொழிலாளர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பட்டாசு ஆலை உரிய அனுமதி இன்றி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்